இந்தியா செய்தி தமிழ்நாடு

“தமிழக வளர்ச்சி குறித்து எனது மன உறுதி மாறவில்லை” – பிரதமர் மோடி

தமிழகத்தில் அரசுகள் மாறிக்கொண்டிருந்தன, ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியும், இங்கிருக்கும் மக்களுக்கு சேவை புரியும் என் மன உறுதியும் எப்போதும் மாறவில்லை.

“தமிழகத்தில் அரசுகள் மாறிக்கொண்டிருந்தன, ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியும், இங்கிருக்கும் மக்களுக்கு சேவை புரியும் என் மன உறுதியும் எப்போதும் மாறவில்லை. இன்று இதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறேன்” என பிரதமர் மோடி கூறினார்.

ரூ.13,000 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சென்னை ஐஐடி மூளை ஆய்வு மையம் மற்றும் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்தும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

” இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக இளைஞர்களுக்குப் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். நவராத்திரியின் புனிதமான இந்நாளில் புண்ணிய பூமியான தமிழகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிர்வாகப் பொறுப்பில் எனது 25 ஆண்டுகாலப் பயணம் நிறைவடைந்துள்ளது. மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் முன்னேற்றம் என்ற கோட்பாட்டோடுதான் எப்போதும் செயல்பட்டு வருகிறேன்.

நான் முதல்வராக இருந்தபோது கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடனும், பிரதமரான பிறகு ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினேன். த

மிழகத்தில் அரசுகள் மாறினாலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் மக்களுக்கு சேவை செய்வதிலும் எனது உறுதிப்பாடு மாறவில்லை. இன்று அதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறேன்.

2014-ல் இந்தியாவில் 5 நகரங்களில் மட்டுமே 250 கி.மீ அளவிற்கு இருந்த மெட்ரோ சேவை, தற்போது 25 நகரங்களில் 1,100 கி.மீ அளவிற்கு விரிவடைந்துள்ளது.

தமிழக மக்கள் தொடர்ந்து பயணித்து சிகரத்தைத் தொட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். வளர்ச்சியடைந்த தமிழகத்தின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.” – எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி