செய்தி

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடு வரலாம்

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

எனினும், முழுமையான தடை குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பிரபுக்கள் சபையுடன் ஏற்பட்ட விவாதத்திற்குப் பின்னர், 16 வயதுக்குட்பட்டோருக்கு வயது வரம்பு அல்லது பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் இதுதொடர்பில் அரசாங்கம் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் பயனுள்ளதாகவும் நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதால், ஆலோசனை முடிவுகளை காத்திருப்பது சரியான நடைமுறை என கல்வித்துறை செயலாளர் கூறினார்.

மேலும், இணையத்தில் இளைஞர்களை பாதுகாப்பது அவசியம் என்றும், சமூக ஊடகங்கள் தொடர்பாக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையிலும், நீண்டகாலம் செயல்படும் வகையிலும் புதிய திட்டம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி