AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரங்கேறும் புதிய முதலீட்டு மோசடி
பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் ‘பம்ப் அண்ட் டம்ப்’ (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய பிணையங்கள் மற்றும் முதலீட்டு ஆணைக்குழு […]













