இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மனோ கைச்சாத்திடாதது ஏன்?

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு ,

“நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாம் இன்னும் கையொப்பம் இடவில்லை. குறித்த பிரேரணை தொடர்பில் நாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் நாம் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது.

எது எப்படி இருந்தாலும் சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்: பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார் மனோ கணேசன்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை