இலங்கை செய்தி

தலைமையேற்க Gen Z தலைமுறைக்கு ரணில் அழைப்பு

“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாம் எமது காலப்பகுதியில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஜே.ஆர்.காலத்தில் எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. எமது சிந்தனைகளுக்கு இடமளிக்கப்பட்டது. முன்னோக்கிச்சென்றோம்.

எமது காலத்தில் எமது சிந்தனை பற்றி பெற்றோருக்கு புரிதல் இருக்கவில்லை. இன்று காலம் மாறிவிட்டது. இளைய தலைமுறையின் சிந்தனை பற்றி, இளைய தலைமுறைக்குதான் தெரியும். எனவே, தலைமையேற்க நீங்களே முன்வர வேண்டும்.

அதற்கான ஆலோசனை, வழிகாட்டலைதான் எம்மால் வழங்கமுடியும். ஏனெனில் எமது காலம் முடிந்துவிட்டது.” – என்றார் ரணில் விக்கிரமசிங்க.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை