முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு
இலங்கையின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் காவல்துறைமா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய சந்தன விக்ரமரத்ன,இலங்கையின் 35வது காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்.




