அரசியல் இலங்கை செய்தி

இலங்கை சிங்கள, பௌத்த நாடு: திலீபனை நினைவுகூர முடியாது

“இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அமுலில் இருக்க வேண்டும். வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவது தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வலிக்கின்றது.”- என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்தார்.

“இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அமுலில் இருக்க வேண்டும். வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவது தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வலிக்கின்றது.”- என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ திலீபனுக்கு உருவச்சிலை வைத்து திலீபனுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்படும்போது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது?

பயங்கரவாதி என்பவர் பயங்கரவாதிதான். அவரை அப்பாவியாக கருத முடியாது. டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே இப்படியான நிகழ்வுகள் நடக்கின்றன.

திலீபனுக்கு நினைவேந்தல் நடக்கும்போது சிங்கள மக்களுக்கு அது வேதனையை ஏற்படுத்துகின்றது. அப்பாவி சிங்கள மக்களின் பிள்ளைகள்தான் போருக்கு சென்றனர். பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு இது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது சிங்கள, பௌத்த மற்றும் பௌத்த கலாசார நாடாகும். அனைவருக்கும் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதே பொருந்த வேண்டும்”- என்றார் தேரர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை