அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது. இந்தியா செய்தி

அமெரிக்காவிடமிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்குகிறது இந்தியா

  • August 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது. இந்தியா – அமெரிக்கா இடையி​லான பாது​காப்பு உறவு​களை வலுப்​படுத்​தும் வித​மாக அமெரிக்​கா​விடம் இருந்து ஏவுகணைகள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை​யும், ராணுவ தளவாடங்​களை​யும் இந்தியா கொள்​முதல் செய்து வரு​கிறது. இதற்கமைய அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்பை இந்​தியா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​துள்​ளார். அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில்​,”​போர்க்​களத்​தில் சோதிக்​கப்​பட்ட […]

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை செய்தி

இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி யாழில் போராட்டத்துக்கு ஏற்பாடு

  • August 29, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகர சபை தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நகர பிதா தலைமையில் இடம்பெற்றது. அதன் […]

நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு: புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் வரை டொலர்கள் தேவை

  • August 29, 2026
  • 0 Comments

நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார். இது அந்நாட்டுப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்குச் சமமான தொகையாகும். “ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரை தேவைப்படலாம். இது ஒரு முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, இலங்கை 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

GSP+ வரிச்சலுகையை பெறுவதற்கு இலங்கை மீண்டும் விண்ணப்பம்

  • August 29, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, இலங்கை 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்காக, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றுச்சூழல் உடன்பாடுகளுக்கு இணங்குதல் தொடர்பான தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பில் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய […]

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர் இந்தியா செய்தி

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்

  • August 29, 2026
  • 0 Comments

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த நெருக்கடி குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர். வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர். […]

உலகளவில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடிக்கு ஏற்ப ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) தனது வரவுசெலவுத் திட்டத்தில் 16 சதவீதம் குறைத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிதி நெருக்கடி: ஐ.நா. அகதிகள் முகமையின் பட்ஜட் 16 சதவீதம் குறைப்பு

  • August 28, 2026
  • 0 Comments

உலகளவில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடிக்கு ஏற்ப ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) தனது வரவுசெலவுத் திட்டத்தில் 16 சதவீதம் குறைத்துள்ளது. அத்துடன், தனது அதிகாரப்பூர்வ பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 3,500 பேரை நீக்கியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் மற்றும் பிற நாடுகளின் வெளிநாட்டு உதவி நிதி குறைத்ததன் தாக்கத்தால், 2025-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில் முகமையின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகவும், வரவுசெலவுத் திட்டம் […]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை செய்தி

அடுத்த வாரம் கொழும்பு வருகிறது IMF குழு

  • August 28, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, அனைத்துலக நாணய இக்குழு கொழும்பு வரவுள்ளது. இந்த வருகையின் போது, ​​அவர்கள் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர். இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

சீனாவின் முக்கிய இரு பிரமுகர்கள் பதவிகளில் இருந்து நீக்கம்

  • August 28, 2026
  • 0 Comments

சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரச ஊடகமான சின்ஹுவா (Xinhua) வெள்ளிக்கிழமை இன்று வெள்ளிக்கிழமை மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக, மத்திய இராணுவ ஆணைக்குழுவின் துணைத் தலைவராகவும், சீனாவின் சக்திவாய்ந்த அரசியல் பீடத்தின் உறுப்பினராகவும் இருந்த ஜாங் […]

சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார். உலகம் செய்தி பொழுதுபோக்கு

நீண்டகாலப் பகைமைக்கு முடிவு: குர்திஷ் தளபதிக்கு சிரிய அரசில் முக்கிய பொறுப்பு

  • August 28, 2026
  • 0 Comments

சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் எதிரிகளாக இருந்த இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இணக்கத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. தசாப்தத்திற்கும் மேலாக, மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) குர்திஷ் தலைமையிலான “சிரிய ஜனநாயகப் படைகளை” (SDF) வழிநடத்தினார். உள்நாட்டுப் போரின் போது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட அமெரிக்காவுடன் இணைந்த இந்தப் […]

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆஸ்திரேலியா விசேட கவனம்

  • August 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அரச மற்றும் தனியார் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகள், இராணுவமயமாக்கல் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நிலைமை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் […]