இலங்கை செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆஸ்திரேலியா விசேட கவனம்

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அரச மற்றும் தனியார் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகள், இராணுவமயமாக்கல் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நிலைமை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஆஸ்திரேலிய தூதுவர், “அமைதியான மற்றும் வளமான இலங்கையை உருவாக்குவதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்” என்றும் உறுதியளித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை