வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடன் வேண்டும்: நேட்டோவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை
ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் அவர் இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இருவேறு ஏவுகணைத் தாக்குதல்களில், குடியிருப்பு வளாகங்கள் தரைமட்டமாக்கப்பட்டு 50-இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கியின் இந்த உதவிக்கான குரல் […]













