இலங்கை செய்தி

கடும் வறட்சி: இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 12,047 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 6,842 பேரும், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் பேரும் 151, இரத்தினபுரியில் 1,374 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிவேகமாகக் குறைவடைந்துள்ளது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ மையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைக் போக்கும் வகையில், 34 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குப் குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இதன்படி, 34,628 குடும்பங்களைச் சேர்ந்த 113,406 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை