இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: பலி எண்ணிக்கை உயர்வு

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்து, நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சிறைச்சாலையில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல கைதிகளில், தற்போதைய பலியானவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவல்படி, இதுவரை உயிரிழந்தவர்களில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை