புளோரிடாவில் மின் கம்பத்துடன் மோதி சிறிய ரக விமானம் விபத்து
புளோரிடாவின் டைட்டஸ்வில்லில் உள்ள ஸ்பேஸ் கோஸ்ட் விமான நிலையத்திற்கு அருகே சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் விமானி உயிரிழந்துள்ளார்.
ஒற்றை எஞ்சின் கொண்ட அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு சாலையில் மின்கம்பியில் மோதிய பின்னர் தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குப் பிறகு விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் விமானி மட்டுமே இருந்தார் என்றும், அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் டைட்டஸ்வில் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விபத்திற்குப் பிறகு அதிகாரிகள் அப்பகுதிக்கு மின்சாரத்தையும் துண்டித்துள்ளதுடன், சாலையையும் மூடியுள்ளனர்.
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று ஐந்து பேர் உயிரிழந்து, மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்த 24 மணி நேரத்திற்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.




