இந்தியா செய்தி

தவெக வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பான செயல்பாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் நிற்போம்.” “தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (TVK) சிறப்பான செயல்பாட்டுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், மக்களின் […]

இலங்கை செய்தி

இணையக் குற்றங்கள் – 120 வெளிநாட்டினருக்கும் விளக்கமறியல்

  • May 4, 2026
  • 0 Comments

இணையக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தைப் பயன்படுத்தி பணம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 120 வெளிநாட்டு கடத்தல்காரர்கள் நேற்று (03) வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது தப்பிச் சென்ற 12 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் உலகின் பல […]

ஐரோப்பா செய்தி

பிரிஸ்டல் வெடி விபத்து – மக்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிப்பு

  • May 4, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த வெடி விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. இதன்போதுஇரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படதா நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் தடயவியல் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் இடம்பெற்ற […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ ‘ஸ்பிரிங் ஸ்டோம்’ பயிற்சிக்குத் தயாராகும் பிரித்தானிய படை – ரஷ்ய எல்லை அருகே தீவிர இராணுவ ஒத்திகை

  • May 4, 2026
  • 0 Comments

நேட்டோ (NATO) பயிற்சிக்காக பால்டிக் (Baltic)நாடுகளுக்குச் செல்வதற்கு தயாராவதற்காக ஸ்கொட்லாந்தின் Royal Regiment படையினர் நகர்ப்புறப் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையின் 2வது பட்டாலியன் (Battalion) வீரர்கள், ரஷ்ய எல்லைக்கு அருகில் நடைபெறும் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவப் பயிற்சியான ‘Spring Storm’ பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் பயிற்சி ஐரோப்பா முழுவதிலுமிருந்து நட்பு நாடுகளின் படைகளை ஒன்றிணைத்து, அவர்களின் போர் தயார்நிலையை சோதிக்கும் வகையில் நடைபெறுகிறது. இதன் மூலம் எஸ்டோனியா (Estonia) ஆயுதப்படைகளின் திறனும் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல்

  • May 4, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம்( ADNOC ) அட்னாக்குடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தச் சம்பவம், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்தை மீறுகிறது என்றும் ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சுமத்தியுள்ளது. வர்த்தகக் கப்பல்களை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு £78 பில்லியன் கடன் திட்டத்தில் இணைவது குறித்து பிரிட்டன் ஆலோசனை

  • May 4, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் சுமார் £78 பில்லியன் பவுண்ட் கடன் திட்டத்தில் இணைவது, ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் Starmer தெரிவித்துள்ளார். ஆர்மீனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் இதனைத் தெரிவித்துள்ளதார் அத்துடன் பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த உதவி திட்டம் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பிரித்தானிய நிறுவனங்களுக்கு எதிர்கால ஒப்பந்த வாய்ப்புகளையும் வழங்கும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

  • May 3, 2026
  • 0 Comments

உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு நாளில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக ஐந்து மாகாணங்களில், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் விமானப்படை தகவலின்படி, ஒரே இரவில் ரஷ்யா 269 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளது. அதில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 19 ட்ரோன் […]

உலகம் செய்தி

ஈரானின் சமாதானத் திட்டம் என்ன?

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் நாடு, அமெரிக்கா அரசிற்கு புதிய சமாதானத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சமாதானத் திட்டத்தில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. இது 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை நிலையான அமைதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென Al Jazeera தெரிவித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பும், குறிப்பாக இஸ்ரேல் உட்பட,  தாக்குதல் செய்யமாட்டோம் என்று உறுதி […]

இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 

  • May 3, 2026
  • 0 Comments

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03.05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி […]

ஐரோப்பா செய்தி

சமத்துவமின்மையை குறைப்பதே பசுமைக் கட்சியின் இலக்கு

  • May 3, 2026
  • 0 Comments

சமத்துவமின்மையை குறைப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுமே தங்கள் கட்சியின் முக்கிய இலக்குகள் என பசுமைக் கட்சி தலைவர் Zack Polanski தெரிவித்துள்ளது. சமத்துவமின்மை அனைத்தையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாகவே காலநிலை நெருக்கடியும் உருவாகிறது என கூறினார். மேலும் இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமின்றி, சமூக சமத்துவ பிரச்சினையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பசுமைக் கட்சியின் முன்னுரிமைகள் சுற்றுச்சூழலிலிருந்து சமூக சமத்துவத்துக்கு விரிவடைந்துள்ளதாகவும், இது கட்சியின் புதிய அரசியல் அணுகுமுறையை காட்டுவதாகவும் Zack Polanski கூறியுள்ளார். […]

error: Content is protected !!