புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது – ராகுல் காந்தி
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், ஒரு புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இன்று நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.




