மென்செஸ்டர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ரஷ்யாவில் தரையிறக்கம்
மென்செஸ்டர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, சைபீரியாவின் உட்பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து மென்செஸ்டர் நோக்கிச் சென்ற ஹைனான் HU753 ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இந்த அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
விமானிகள் சிக்கலைக் கண்டறிந்த பிறகு, ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள கிராஸ்னோயார்ஸ்க் Krasnoyarsk நகரை நோக்கி விமானத்தை செலுத்தியுள்ளனர்.
அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.




