உலகம்

வவுனியா தொடக்கம் அம்பாறை வரை – வெப்ப எச்சரிக்கை

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாளைய தினம் (17) பகல் நேரத்தில் மேற்கூரிய மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே  சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.

எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்