தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா மின் கட்டமைப்புகளை குறிவைக்கும்
ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா ஈரானின் பாலம் அல்லது மின் கட்டமைப்பு அமைப்பை தாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ரொக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்த சாதனம் அல்லது ஆயுதம் மூலமாக கப்பலைத் தாக்கும் போதெல்லாம், அமெரிக்கா தெஹ்ரானுக்கு அருகில் அல்லது உள்ளே அமைந்துள்ள பாலம், மின்கட்டமைப்புகளை குண்டு வீசி அழிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததாலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டிற்கான போராட்டம் தீவிரமடைந்ததாலும், அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இது மீண்டும் முழு அளவிலான போர்கள் தொடங்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தடைசெய்யும் சர்வதேச சட்டத்தின் கீழ், ஈரானிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருவதற்கும் உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




