இந்தியா செய்தி

ஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்தில் இந்தியா!

  • March 10, 2026
  • 0 Comments

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் Stockholm International Peace Research Institute ஆய்வு அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் போர் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை குவிப்பதற்கு பிரதான காரணமென கூறப்படுகின்றது. கடந்த 2016- 2020 கால கட்டத்தை […]

இலங்கை செய்தி

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் திருகோணமலை பெண்ணுக்கு உயரிய விருது!

  • March 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த பாத்திமா ஸஜீஹா அமீனுக்கு Fatima Sajeeha Amin பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் (Houses of Parliament) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின்போதே அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றி வரும் மகத்தான பணிகளைப் பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக LAS அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் (Mutur) பகுதியில் ஒரு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் அப்பிராந்தியத்திற்கு 2026.02.28 […]

பொழுதுபோக்கு

‘கருப்பு’ குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்.ஜே. பாலாஜி!

  • March 10, 2026
  • 0 Comments

‘கருப்பு’ படம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji தெரிவித்துள்ளார். மேற்படி படம் தொடர்பில் காட்டுத் தீ போல வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி RJ Balaji  வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கருப்பு’ படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சூர்யா ரசிகர்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இந்த காத்திருப்பு பதிலளிக்கும் விதமாக படம் இருக்கும். நானும் இரண்டு […]

விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

  • March 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரிசுத் தொகையை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா 6 கோடி ரூபா வீதம் கிடைக்கப்பெறும். மீதமுள்ள 41 கோடி ரூபா பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த […]

இலங்கை செய்தி

“தமிழகத்திலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப உதவி கோரல்”

  • March 10, 2026
  • 0 Comments

” வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN) ) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கப்படும்.” இவ்வாறு புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இவ்விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இச்சந்திப்பில், […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு: நடக்கப்போவது என்ன?

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் சூழவுக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 ரூபா அதிகரித்து, 317 ரூபாவாக விற்கப்படுகின்றது. ஒக்டேன் 95 பெட்ரோல் விலை 25 ரூபா அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாவாக விற்கப்படுகிறது. ஓட்டோ டீசலின் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாவாகவும், சூப்பர் டீசல் விலை 24 ரூபா அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாவால் […]

செய்தி

“ஈரானின் போர்க்கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி”

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dr. S. Jaishankar தெரிவித்தார். இந்தியாவில் இருந்து ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்து சமுத்திரத்தில் தாக்கி அழித்தது. இது விடயத்தில் இந்தியா மௌனம் காத்துவருவது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று […]

இலங்கை செய்தி

இளவாலையில் போதைப்பொருளுடன் கைதான இளைஞரிடமிருந்து திருட்டு நகைகள் மீட்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து யாழுக்கு போதைப்பொருள் கடத்திய ஆணும், பெண்ணும் கைது!

  • March 10, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருட்களை கடத்திச்சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் , 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கொழும்பில் உள்ள போதைப்பொருள் […]

error: Content is protected !!