இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலை சம்பவம்: நீதி அமைச்சருக்கு மீண்டும் நெருக்கடி

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். அதேபோன்று 20 கைதிகளும் பலியானார்கள்.

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் கூட, சிறைச்சாலைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தற்போது மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

எனவே, மஹர சிறைச்சாலை சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அத்துடன், நீதி அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,” – என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை