கேரளாவில் கனமழைக்கு 15 பேர் பலி: எழுவர் மாயம்
கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார்.
கனமழை நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11,018 பேருக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்கள் இயங்கி வருவதாக, உயர் அதிகாரிகளுடன் வெள்ள நிலைமையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
மழையின் தீவிரத்தன்மை சற்று குறைந்திருந்தாலும், மிதமான மற்றும் கனமழை மாநிலத்தைப் தொடர்ந்து பாதித்து வருகிறது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரளாவிற்கான மழை எச்சரிக்கையை மஞ்சள் நிறத்திலிருந்து (Yellow alert) ஆரஞ்சு நிறத்திற்கு (Orange alert) உயர்த்தியுள்ளதுடன், கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.




