ஆளுங்கட்சிக்கு நேசக்கரம் நீட்டி பதவியை இழந்த பெண் அரசியல்வாதி!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் SLMC கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) போது, கட்சியின் தீர்மானத்தை மீறி ஆளும் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தார். இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி உறுப்புரிமை […]













