வரலாற்றில் முதல் முறையாக ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
வரலாற்றில் முதன்முறையாக, ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது.
ஜப்பானில் தற்போது 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 107,677 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, 100 வயதுக்கு மேற்பட்ட 100,000-க்கும் அதிகமான முதியோர்களைக் கொண்ட உலகின் ஒரே நாடாக ஜப்பான் உருவெடுத்துள்ளது.
மேலும், அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சுகாதார அமைப்பு, மருந்துகளின் தரம் மற்றும் மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த நிலை எட்டப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என ஜப்பானிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.




