ஐரோப்பா செய்தி

‘ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு’ – அமெரிக்கா, ஜெர்மன் ஆராய்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Johannes Wadephul மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் Marco Rubio ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர ரீதியாக சிக்கல்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல வாய்ப்பு என்று வேட்புல் கருதுகிறார்.

கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் ஒரு நிலையான தீர்வை எட்டுவதே தற்போதைய முதன்மை நோக்கமாக உள்ளது.

சர்வதேச அளவில் ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என்று ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி