செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களை நெகிழ வைத்த மெக்சிகோ மக்கள்

srilankalatestnews,SrilankaLatestNews,srilankanews,srilankatamilnewstoday, newstoday,news,australianews,australia,todaynews,latestnews,bestnews

அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால் நெகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளது.

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து ஈரான் அணி (Team Melli) தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா பெற்ற இறுதிநேர சமநிலை (Equaliser) காரணமாக, ஈரான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோனது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ளதால், ஈரான் கால்பந்து அணி உலகக் கிண்ணத் தொடரின் போது கடுமையான லாஜிஸ்டிக்ஸ் (Logistical) மற்றும் விசா நெருக்குவாரங்களை எதிர்கொண்டது.

விசா சிக்கல்களுக்குப் பயந்து, தொடர் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பே ஈரான் அணி தனது பயிற்சி முகாமை அமெரிக்காவின் அரினோசாவிலிருந்து (Arizona) மெக்சிகோவின் எல்லையோர நகரான டிஜுவானாவிற்கு (Tijuana) மாற்ற வேண்டியிருந்தது.

போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மண்ணில் போட்டிகள் முடிந்த சில மணித்தியாலங்களிலேயே, ஈரான் வீரர்கள் உடனடியாக மெக்சிகோவிற்குத் திரும்பிவிட வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்கா ஈரானை அச்சுறுத்திய போதிலும், மெக்சிகோ நாட்டு மக்கள் ஈரான் அணியை இருகரம் கூப்பி வரவேற்றனர்.

ஈரான் வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்கு முன்பாகத் திரண்ட மெக்சிகோ ரசிகர்கள், வீரர்களுக்குப் பேராதரவு வழங்கியதோடு ஆட்டோகிராப்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான உறவு சமூக ஊடகங்களிலும் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி