உலகம் செய்தி

ஈரானின் முக்கிய தலைவரின் குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைவர் மாசூமே எப்தேக்கரின் Masoumeh Ebtekar உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio ரத்து செய்துள்ளார். இதற்கமைய எப்தேக்கரின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் தகுதியை இழந்து நாடுகடத்தப்படுவதற்காகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானியப் பிரமுகர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்குவதற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, […]

உலகம் செய்தி

24 மணி நேரத்துக்குள் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது தாக்குதல்!

  • April 11, 2026
  • 0 Comments

லெபனானில் ஒரே நாளில் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், ஏவுகணைத் தளங்களை அழிக்கும் நோக்கோடும் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல்களில் தெற்கு லெபனானில் ஆறு பேர் பலியாகியுள்ளனர் எனவும், ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சில், லெபனானில் முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமைதி பேச்சு நடைபெறும் நாளில் […]

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா அமைதி பேச்சு ஆரம்பம்!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில்  ஆரம்பமாகியுள்ளது. ஈரான் அரச ஊடகம் மற்றும் சர்வதேச ஊடங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடனேயே மேற்படி பேச்சு ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி […]

இலங்கை செய்தி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!

  • April 11, 2026
  • 0 Comments

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவீடுகள் முன்னெடுக்கப்படும் என்று கடற்தொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தையிட்டி திஸ்ஸ விகாரை […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத் அமைதி பேச்சு தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவானது தனது வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலை விட சொந்த நாட்டு நலன்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதி பேச்சின் வெற்றி, அமெரிக்காவின் முடிவிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலவேளை அமெரிக்கா இஸ்ரேலின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும். அவ்வாறு நடந்தால் ஈரான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெப்போதையும் விட தீவிரப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் […]

உலகம் செய்தி

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குகிறது சீனா?

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு சீனா தயாராகிவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஆயுத பரிமாற்றத்தில் தாம் பங்கேற்கவில்லை என்ற விம்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நட்பு நாடுகள் ஊடாக அவற்றை கையளிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இக்காலப்பகுதியை பயன்படுத்தி தனது ஆயுத இருப்பைப் புதுப்பித்துக் கொள்ள ஈரான் முனையக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், […]

இந்தியா தமிழ்நாடு

‘ஜனநாயகன்’ வெளியானது அரசியல் சதி!

  • April 11, 2026
  • 0 Comments

‘ஜனநாயகன்’ படத்தை இரகிசயாக வெளியிட வைத்து வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என தமிழக பா.ஜ.க. விமர்சித்துள்ளது. படம் வெளியானமை தொடர்பில் சி.பி.ஐ. விசாரணை கோர விஜய் தயாரா என சவாலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாவுக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி அனுதாப […]

இலங்கை

போக்குவரத்து விதிமீறல்களை அறிவிக்க விசேட WhatsApp இலக்கம்!

  • April 11, 2026
  • 0 Comments

புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக 070 4755600 என்ற விசேட வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தென்படும் போக்குவரத்து விதிமீறல்களை காணெளியாக பதிவு செய்து இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். புத்தாண்டு […]

இலங்கை செய்தி

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.ஐ.டியில் முறைப்பாடு!

  • April 11, 2026
  • 0 Comments

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CID இன்று (11) முற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது. நிலக்கரி மோசடி தொடர்பிலேயே எரிசக்தி அமைச்சருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் களமிறங்கியது அமெரிக்க தூதுக்குழு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமைதி பேச்சுக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். துணை ஜனாதிபதி JD Vance தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவினரை, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். பாகிஸ்தான் ராணுவ தளபதியும் விமான நிலையம் சென்றிருந்தார். அமெரிக்கத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது உலகளாவிய அமைதிக்கான அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட […]