இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.






