கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது சிறிலிய சவியா அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்ய சிறுவர் மருத்துவமனைக்கு ஒரு சி.டி. ஸ்கேனரை வழங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, உரிய இயந்திரத்தை வழங்காததன் மூலம் ஊழல் குற்றம் மற்றும் […]



