கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
BY VD
October 7, 2026
0
Comments
11 Views
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் மீது சிறிலிய சவியா அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்ய சிறுவர் மருத்துவமனைக்கு ஒரு சி.டி. ஸ்கேனரை வழங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, உரிய இயந்திரத்தை வழங்காததன் மூலம் ஊழல் குற்றம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலஞ்ச ஆணைக்குழுவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்