ஐரோப்பா

உளவு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாக இத்தாலிய தூதர்களை நாடு கடத்தி ரஷ்யா!

உளவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னதாக இரண்டு ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய இத்தாலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா இரண்டு இத்தாலிய தூதர்களை விரும்பத்தகாத நபர்களாக அறிவித்து அவர்களை வெளியேற்றியுள்ளது.

இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றுவதால், அவற்றுக்கிடையேயான இருதரப்பு பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா, இத்தாலிய பாதுகாப்புத் தூதர் ஒருவரும் அவரது உதவியாளரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத் தூதர் டேவிட் டி’அப்ரில் மற்றும் உதவி பாதுகாப்புத் தூதர் விட்டோரியோ பரேலா ஆகியோரை விரும்பத்தகாத நபர்கள் என அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

இந்நிலையில், மூன்று நாட்களுக்குள் தங்கள் குடும்பங்களுடன் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தூதர்களுக்கு எதிராக இத்தாலி முன்பு எடுத்த நடவடிக்கைகளுக்கு நேரடி பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜகரோவா விளக்கினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இத்தாலிய துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி சமூக ஊடகங்களில் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

“ரஷ்யா எந்தவித நியாயமும் இன்றி இத்தாலிய பாதுகாப்புத் தூதரையும் அவரது உதவியாளரையும் மொஸ்கோவிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இத்தாலியிலிருந்து இரண்டு ரஷ்ய இராணுவத் தூதர்களை நாங்கள் வெளியேற்றியதற்குப் பழிவாங்கும் வெளிப்படையான செயல் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அந்த நபர்கள் நமது தேசியப் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கையும் களவுமாகப் பிடிபட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ரோமில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் இரண்டு தூதர்களை வெளியேற்றுவதாக ஜூலை 9 அன்று தஜானி அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்