ஐரோப்பா

மொஸ்கோவிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் – குடியிருப்பு கட்டடம் சேதம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பில்   பிராந்திய அளுநர் வோரோபியோவ் (Vorobyov) டெலிகிராமில் , உடைந்த ஜன்னல்களுடனும், மேல் தளங்களிலிருந்து கருப்புப் புகை எழுவதையும் காட்டும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று செக்கோவ் நகர மேயர் மிகைல் சோபாகின்(Mikhail Sobakin) மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் போடோல்ஸ்க் (Podolsk), டொமோடெடோவோ (Domodedovo) மற்றும் கொலோம்னா (Kolomna) உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற பகுதிகளில் சில  ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாயக்கிழமை அதிகாலை வரை 390-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் வீசப்பட்டதாகவும் அவற்றில் 81 ட்ரோன்கள் ரஷ்ய தலைநகருக்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்