ஐரோப்பா

போர் அச்சம் – வங்கியில் இருந்து பணத்தை மீளப் பெறும் ரஷ்ய மக்கள்

  • August 19, 2026
  • 0 Comments

ரஷ்ய மக்கள் வங்கிகளில் வைப்பிட்டுள்ள பணத்தை மீளப் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்,   சுமார் €24.4 பில்லியன் தொகையைத் மக்கள் திரும்பப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்கு நிதியளிப்பதற்காக கிரெம்ளின் தனியார் வைப்புத்தொகைகளை முடக்கவோ அல்லது தேசியமயமாக்கவோ கூடும் என்ற அச்சம் பரவியதால் மக்கள் இவ்வாறு பணத்தை மீளப் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Banks.ru நிதிச் சந்தையின் தரவுகளின்படி, பணத்திற்கான தேவை மார்ச் மாத தொடக்கத்தில் உயரத் தொடங்கி, தொடர்ந்து அதிகரித்து வருவதாக […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் குதித்த பிரித்தானியா : எச்சரிக்கும் ரஷ்யா

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியா தயாரித்த இரண்டு ட்ரோன்கள் ரஷ்யாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரித்தானியா போரை மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரித்தானியா […]

ஐரோப்பா

போர்களத்தில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களை இழந்த ரஷ்யா – மார்த்தட்டும் உக்ரைன்

  • August 17, 2026
  • 0 Comments

ரஷ்யா போரில் கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 42,860 உயிரிழப்புகளை சந்தித்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே காலகட்டத்தில்,  மிகப்பெரிய நிலப்பரப்பு வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைன் கூறுகிறது. தெற்கு முனையில் தங்கள் படைகள் கிட்டத்தட்ட 300 சதுர மைல்களையும் 26 குடியிருப்புகளையும் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக கீவ் கூறுகிறது. அதேநேரம் ரஷ்யப் படைகள் முன்னணிப் பகுதியின் சில இடங்களில் ஏழு மைல்களுக்கும் மேலாகப் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தின் மொத்த உயிரிழப்புகள் இப்போது 1.5 […]

ஐரோப்பா

ரஷ்யாவை வெறிகொண்டு தாக்கிய உக்ரைன் – 06 பேர் உயிரிழப்பு

  • August 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் 800இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி உக்ரைன் நேற்று  தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக தெற்கு மற்றும் மேற்கு ரஷ்யாவில் உள்ள 17 பிராந்தியங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலால் ரஷ்ய மின் வணிக நிறுவனமான வைல்ட்பெர்ரீஸுக்குச் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் துறைமுக நகரம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

  • August 12, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்கில், உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 06 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பலர் காயமடைந்த நிலையில்,  அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக மேயர் ஆண்ட்ரி கிராவ்சென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ளார். அதேநேரம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோலில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோஷாயேவ் (Mikhail Razvozhayev) குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் சில வீடுகள் சேதமடைந்தன, […]

உலகம்

18 மாத கால பேச்சுவார்த்தை : சிரியா – ரஷ்யாவிற்கு இடையில் ஒப்பந்தம்

  • August 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்ள மொஸ்கோவின் இராணுவத் தளங்களின் எதிர்காலம் குறித்து அந்நாட்டுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டார்டஸ் மற்றும் ஹ்மெய்மிமில் உள்ள ரஷ்ய தளங்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக சிரியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிரிய வெளியுறவு அமைச்சகம் நேற்று இந்த தகவலை உறுதிப்படுத்தியது. […]

ஐரோப்பா

ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக இணைய வலையமைப்பை வலுப்படுத்தும் ரஷ்யா

  • August 11, 2026
  • 0 Comments

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக, ரஷ்யா தனது ராஸ்வெட் (Rassvet) செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை விரைவாக நிறுவி வருவதாக உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. பியூரோ 1440 என்ற விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராஸ்வெட், தற்போது 16 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. 2027 இற்குள்  292 ஆகவும், 2035இற்குள் 924 ஆகவும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்படும் கள்ளச் சந்தை முனையங்களைச் செயலிழக்கச் செய்யுமாறு ஸ்பேஸ்எக்ஸிடம் கீவ்  பரிந்துரைத்த பிறகு, உக்ரேனின் ட்ரோன் செயல்பாடுகள் […]

ஐரோப்பா

பிரித்தானிய கடல் பகுதிக்கு அருகில் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கைகள் அதிகரிப்பு

  • August 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கடல் பகுதிக்கு அருகில் ரஷ்ய கடற்படை நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ரோயல் கடற்படை தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக ஜூலை மாதம் 21 நாட்கள் செலவிட்டதாகவும் கடற்படை  கூறியுள்ளது. 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யக் கப்பல்களைக் கண்காணிக்கும் கடற்படை நடவடிக்கைகள் ஜூலை மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. போர்க்கப்பல்கள் டோவர் ஜலசந்தி மற்றும் வடகடலில் மீண்டும் மீண்டும் பயணித்துள்ளன. “நிழல் கடற்படை” எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ரஷ்யாவின் நியூஸ்ட்ராஷிமி (Neustrashimy) மற்றும் அட்மிரல் கிரிகோரோவிச்  […]

ஐரோப்பா

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் -ரஷ்யா மறுப்பு

  • August 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் தாக்குதலை பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. இது, ரஷ்யா மீது ஆதாரமின்றி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று தூதரகம் கூறியுள்ளது. அதேநேரம் ஜெர்மனியில் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு புதிய அலை குறித்து தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தி   அறிக்கையொன்றையும் பகிர்ந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு முக்கியமான பொது சரக்கு மற்றும் நேட்டோ தளவாட மையமான லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில், ட்ரோன் ஒன்று […]

ஐரோப்பா

ரஷ்யாவின் புதிய திட்டம் – நேட்டோ நாட்டின் மீது குறி

  • August 7, 2026
  • 0 Comments

நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது ரஷ்யா சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி அவ் அமைப்பின்  வலிமையை சோதிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் மேற்கோள் காட்டப்பட்ட அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இணையவழித் தாக்குதல்கள், நாசவேலை அல்லது ஒரு சிறிய அளவிலான தரைவழி ஊடுருவல் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யாவின் ட்ரோன்கள் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]