Stratford and Bow தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் ராஜாங்க அமைச்சராகவும் (junior Foreign Office minister) உதவி கொறடாவாகவும் ஆகவும் (Assistant Whip) நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

‘ஈழத் தமிழர்களின் சர்வதேசக் குரல்’ – உமா குமரனுக்கு உயரிய அங்கீகாரம்

  • July 24, 2026
  • 0 Comments

Stratford and Bow தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் ராஜாங்க அமைச்சராகவும் (junior Foreign Office minister) உதவி கொறடாவாகவும் ஆகவும் (Assistant Whip) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து Stratford and Bow தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். எனினும்,, வெளியுறவு விவகாரக் குழுவிலிருந்து விலகுவதோடு, எழுத்துப்பூர்வ நாடாளுமன்றக் கேள்விகளைக் கேட்கும் உரிமையையும் இழக்கிறார். உமா குமரனின் இந்த நியமனம், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழியில் மழைக்கவசத்துடன் சிறுவனின் எலும்புக்கூட்டுத் தொகுதி மீட்பு

  • July 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் சிறுவனின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்றைய அகழ்வின் போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்படட்ட 9 மனித என்புத் தொகுதிகள் […]

கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது. உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தின் நியாயமற்ற வரி விதிப்பு: பிரேசில் நிராகரிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் பிரேசிலில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 12.5% வரி விதிக்கப்படும். தனது பரஸ்பரச் சட்டத்தின் (Reciprocity Law) கீழ் பதிலடி நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கப்போவதாகவும், இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்பின் (WTO) […]

கட்டாய உழைப்புத் தடைகளை (forced labor bans) செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% வரையிலான புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் விதிக்கவுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலக நாடுகள்மீது ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் வர்த்தகப் போர்: 12.5 சதவீத வரி விதிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்புத் தடைகளை (forced labor bans) செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% வரையிலான புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் விதிக்கவுள்ளது. தற்காலிக 10% உலகளாவிய வரியின் காலம் முடியும் அதே நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% […]

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதிகள், மற்றும் ராணுவ ஆலோசகர்களை ஈரான் ,யேமனுக்கு அனுப்பிவைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் தளபதிகள் யேமன் விரைவு: ஆயுதங்களும் அனுப்பி வைப்பு: பின்னணி என்ன?

  • July 23, 2026
  • 0 Comments

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதிகள், மற்றும் ராணுவ ஆலோசகர்களை ஈரான் ,யேமனுக்கு அனுப்பிவைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணை, ட்ரோன் சார்ந்த தளவாடப் பொருட்களையும் கடந்த ஜுலை 13 ஆம் திகதி விமானம் மூலம் யேமனுக்கு ஈரான் அனுப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய வட்டாரங்கள், யேமனின் செய்தித்துறை அமைச்சர் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் ஆகியோர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்த விவரங்களை வழங்கியுள்ளனர். ஹவுதி அமைப்பினரைப் பலப்படுத்துவதற்கு ஈரான் மேற்கொண்டு […]

அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறுகிறார். உலகம் செய்தி

“அமெரிக்க-சவுதி அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறுகிறார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, மத்திய கிழக்கில் ஒரு புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகும் என்பது குறித்த கவலைகள் இஸ்ரேலில் எழத் தொடங்கின. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சவூதி அரேபியா அமெரிக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அணு உலைகளைக் கட்டவும் யுரேனியத்தைச் செறிவூட்டவும் அனுமதிக்கப்படும். இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியா அமைதியான நோக்கங்களுக்காக […]

ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு செய்தி

ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு

  • July 23, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்றை நடத்தின. இதன்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார். “ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிரணிகள் அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. […]

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

ஈரான் ஒப்பந்தம் ஒன்றை செய்ய கெஞ்சுகிறது: மார்கோ ரூபியோ

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹ்ரான் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒவ்வொரு இரவும் அது கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ இதனை தெரிவித்துள்ளார். ஈரான் தன் உணர்வுக்குத் திரும்பும் வரை, ஒவ்வொரு இரவும் அது அதிக விலையைக் கொடுக்கும் என்று கூறினார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறது, ஆனால் […]

பிரித்தானியா முழுவதும் இன்று முதல் புதிய குழாய் நீர் பயன்பாட்டுத் தடை அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியா இன்று முதல் குழாய் நீர் பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடு

  • July 23, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் இன்று முதல் புதிய குழாய் நீர் பயன்பாட்டுத் தடை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, பல பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டனின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனமான தேம்ஸ் வாட்டர், தனது விநியோக வலையமைப்பு முழுவதும் உள்ள வீடுகள் இந்த நடவடிக்கைகளை உடனடியாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. புதிய விதிகளின்படி, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல், சிறுவர் நீச்சல் குளங்களை நிரப்புதல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற தேவைகளுக்குக் […]

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களுக்கு மறியல்

  • July 23, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்றுக் காலை மீன்பிடி இழுவைப் படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற 9 மீனவர்களும் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த நிலையிலேயே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் […]