விளையாட்டு

வெற்றிக் கனியை ருசித்தது ஆப்கானிஸ்தான்!

  • February 16, 2026
  • 0 Comments

ICC T – 20 உலக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற 28 ஆவது லீக் ஆட்டத்தில் 28th Match ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. D குழுவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் Afghanistan மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates ஆகிய அணிகள் டெல்லியில் இன்று (16) பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீகரம் UAE அணி நிர்ணயிக்கப்பட்ட 20 […]

இந்தியா

பங்களாதேஷ் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்புகிறது இந்தியா!

  • February 16, 2026
  • 0 Comments

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் Tariq Rahman நாளை (17) பதவியேற்கவுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை( 17) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, பங்களாதேஷ் நேற்று அழைப்பு விடுத்துள்ளது. எனினும், வரும் […]

உலகம்

எதிர்க்கட்சி தலைவரின் மரணத்துக்கு புடின் பொறுப்பு கூற வேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • February 16, 2026
  • 0 Comments

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் Alexei Navalny மரணத்துக்கு புடின் Putin நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong வலியுறுத்தியுள்ளார். அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன. மேற்படி நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே ஆஸ்திரேலியா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் […]

செய்தி

வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்த சவூதியிடம் உதவி கோரியது இலங்கை!

  • February 16, 2026
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ,சவூதி கடற்படை (RSNF) தளபதி வைஸ் அட்மிரல் Mohammed bin Abdulrahman Al-Ghribi உடன் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பாதுகாப்பு அமைச்சில், World Defence Show (WDS) 2026 நிகழ்வின் போது நடைபெற்றது. இலங்கை ஒரு தீவாக இருப்பதினால், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல், […]

இலங்கை செய்தி

யாழ். வலி.வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.” இவ்வாறு கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar தெரிவித்தார். மக்களுடைய காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “ பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் படையினரின் வசமிருக்க வேண்டிய தேவை […]

இலங்கை செய்தி

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ” பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்க லிபரல் கட்சி திட்டம்!

  • February 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள Angus Taylor, தமது ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவதற்குரிய உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதற்கமைய ஆஸ்திரேலியாவுக்குள் வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்போகிறாராக உறுதியளித்துள்ளார். “Australia வாழ்க்கை முறையையும் அடிப்படை மதிப்புகளையும் ஏற்காதவர்களுக்கு நாட்டின் கதவுகள் திறந்திருக்காது” என்று Angus Taylor எச்சரித்துள்ளார். தற்போதைய குடியேற்றத் திட்டத்தில் தரநிலைகள் தளர்ந்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் மீது அதிக […]

விளையாட்டு

இலங்கை, ஆஸ்திரேலியா இன்று மோதல்!

  • February 16, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் பலம்பொருந்திய இரு அணிகள் இன்று (18) பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை Sri Lanka மற்றும் ஆஸ்திரேலியா Australia அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு கண்டி , பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண தொடரில் தான் எதிர்கொண்ட முதல் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும். சிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு, அடுத்த சுற்று தொடர்பான எதிர்பார்ப்பை […]

இலங்கை செய்தி

சுயாட்சி அம்சங்களுடன் புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!

  • February 16, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் Jaffna நேற்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் […]

இலங்கை செய்தி

17 ஆம் திகதி இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர்!

  • February 15, 2026
  • 0 Comments

பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி David Lammy , எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரையும் அவர் சந்திப்பார் என தெரியவருகின்றது. மேலும், “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான உலகளாவிய சாசனம்” (Charter for the Global Campaign […]

error: Content is protected !!