உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: இருவர் பலி – பலர் காயம்
உக்ரைன் முழுவதும் ரஷ்யா நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் Sumy பிராந்தியத்தில் ஒருவரும், Dnipropetrovsk பிராந்தியத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
மேலும், தென்கிழக்கு நகரமான Zaporizhzhia மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.
வடக்கு உக்ரைனின் சுமி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 66 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதாக பிராந்திய ராணுவ ஆளுநர் Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள அதே பிராந்தியத்தின் மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு நகரமான ஜாபோரிஜியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரக்கால சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.




