இலங்கை செய்தி

“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு சமாதி கட்டுக: கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை!

  • February 23, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை Terrorism Prevention Act முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கையொப்பத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

இலங்கை செய்தி

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

  • February 23, 2026
  • 0 Comments

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற மேற்படி நபர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் மேற்படி நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. இந்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் […]

இலங்கை செய்தி

555 பயணிகளுடன் சுற்றுலாக் கப்பல் திருகோணமலை துறைமுகம் வருகை!

  • February 23, 2026
  • 0 Comments

555 சுற்றுலாப் பயணிகளுடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, “M.V.Crystal Symphony” எனும் கப்பல் இன்று (23) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இக்கப்பல் மூலம் திருகோணமலையை வந்தடைந்தனர். அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரணை போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பஹாமாஸ் நாட்டில் The Bahamas பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 497 பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன் இவர்கள் திருகோணமலையில் ஒரு நாள் […]

இலங்கை செய்தி

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது!

  • February 23, 2026
  • 0 Comments

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது! மரை இறைச்சியை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரவெவ இரண்டாம் வாய்க்கால் பகுதியில் வீடொன்றில் மரை இறைச்சி விற்பனை செய்யப்பட்டுவருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தகவலுக்கமைய வீட்டை சோதனையிட்ட போது 04 கிலோ 500 கிரேம் மறை […]

இந்தியா தமிழ்நாடு

தமிழக தேர்தல் ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் இடையிலான போர்!

  • February 23, 2026
  • 0 Comments

நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலானது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான போராகும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று (23) உரையாற்றுகையிலேயே விஜய் இவ்வாறு கூறினார். “மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.” எனவும் விஜய் சுட்டிக்காட்டினார். தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் […]

இலங்கை செய்தி

அடிபணியமாட்டார் நாமல்: மொட்டு கட்சி சூளுரை!

  • February 23, 2026
  • 0 Comments

“ சவால்களை கண்டு அஞ்சும் தலைவன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa அல்லர்.”என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP சூளுரைத்துள்ளது. கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாமல் ராஜபக்சவின் லண்டன் உரைகள் இரத்து செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டப்பட்டது. இதன்போது மொட்டு கட்சி உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும்போதும் இவ்வாறு அன்று எதிர்ப்பு இருந்தது. எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் […]

பொழுதுபோக்கு

ராஷ்மிகாவுக்கு 26 ஆம் திகதி டும்…டும்…டும்!

  • February 23, 2026
  • 0 Comments

தாங்கள் திருமண பந்தத்தில் சங்கமிக்கவுள்ளதை விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda, ராஷ்மிகா ஜோடி Rashmika முதன் முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ம் ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இவர்களின் இணைவு தொடர்பில் இதற்கு முன்னரும் தகவல்கள் வெளியாகி இருந்தாலும், தற்போதே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தக் கடிததிற்கு […]

இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்க வைப்பதில் இலங்கை தீவிரம்!

  • February 23, 2026
  • 0 Comments

ஜி.எஸ்.பி. பிளஸ் GSP+ வரிச்சலுகையை தக்க வைத்துக்கொள்வதற்குரிய முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தால் European Union இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் காலாவதியாகியுள்ளது. இந்நிலையிலேயே அச்சலுகையை நீடித்துக்கொள்வதற்குரிய இராஜதந்திர முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் Emmanuel Macron ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake நடத்திய சந்திப்பின்போது இது பற்றி பேசப்பட்டது. புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சு […]

இலங்கை செய்தி

பிரதான உரைகள் ரத்து: எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் லண்டன் சென்றார் நாமல்!

  • February 23, 2026
  • 0 Comments

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டனில் அவர் பௌத்த விகாரையில் வழிபடுவது தொடர்பான படங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. முக்கிய இரு உரைகள் மற்றும் சில சந்திப்புகளுக்காக நாமல் ராஜபக்ச லண்டன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், நாமலின் லண்டன் உரைகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்நிலையில் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தொடர்பான […]

இந்தியா

வரி விவகாரம்: இந்தியா, அமெரிக்க பேச்சு ஒத்திவைப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கா USA மற்றும் இந்தியாவுக்கிடையில் India இன்று (23) வாஷிங்டனில் Washington நடைபெறவிருந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி விகிதங்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் President Trump கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்தார். அடுத்த […]

error: Content is protected !!