ஐரோப்பா

UKவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு

டோவர் Dover  மற்றும் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை தேடி வருவதாக காவல்துறை அறவித்துள்ளது.

குற்றவாளிகள் “சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்வார்கள்” என்று அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

காமன்ஸில் பேசிய காவல்துறை அமைச்சர் சாரா ஜோன்ஸ் Sarah Jones, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும், “பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில்” அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியேறிகளுக்கு எதிராக தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், வாகனங்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்