இலங்கை செய்தி

இலங்கை, பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்த லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில், இலங்கை பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல்களின்போது, ​​இரு பாதுகாப்பு அதிகாரிகளும், நடைபெற்றுவரும் பாதுகாப்பு உரையாடல், இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள், பாதுகாப்புப் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானின் கூடுதல் பாதுகாப்புச் செயலாளர் ரியர் அட்மிரல் அமீர் மஹ்மூத், சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமட் பாரூக் ஆகியோரும் உடனிருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை