சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிறுவன்
சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சிட்னியின் முக்கிய மையப்பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், மேற்கு சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அச்சிறுவனுக்கு 14 வயது. அவரது கணினியில் தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய 40-க்கும் மேற்பட்ட காணொளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெயர் வெளியிடப்படாத அச்சிறுவன், செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தண்டனை விவரங்கள் மீதான […]













