முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு […]













