இலங்கை செய்தி

22மீது 30 இற்கு மேற்பட்ட மனுக்கள்: இன்று உயர்நீதிமன்றில் விசாரணை

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
SRI LANKA-POLITICS/

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 30இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வை நியமித்துள்ளார்.

பிரதம நீதியரசர் தலைமையிலான இந்த அமர்வில், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர, சம்பத் அபயகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெறுவார்கள்.

இந்த திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க, சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தமது மனுக்களில் கோரியுள்ளன.

அத்துடன் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் முழு அமர்வே இந்த மனுக்களை பரிசீலிக்க வேண்டும் எனக் கோரியிருந்த போதும், 5 நீதியரசர்களை கொண்ட அமர்வே இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை