தியாக தீபம் திலீபனுக்காக இன்று புதன்கிழமை முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை யாழ். நல்லூரில் 'அணையா விளக்குப் போராட்டம்' முன்னெடுக்கப்படவுள்ளது இலங்கை செய்தி

திலீபனின் சிலையை மீள நிறுவுமாறு வலியுறுத்தி யாழில் அணையா விளக்கு போராட்டம்

  • September 30, 2026
  • 0 Comments

தியாக தீபம் திலீபனுக்காக இன்று புதன்கிழமை முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை யாழ். நல்லூரில் ‘அணையா விளக்குப் போராட்டம்’ முன்னெடுக்கப்படவுள்ளது யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையைப் பொலிஸார் அகற்றிச் சென்றதைக் கண்டித்தும், அதனை மீள அவ்விடத்திலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. சிலையைப் பொலிஸார் அகற்றியதைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் நினைவேந்தல் குழுவினராலும், திங்கட்கிழமை வலிந்து காணாமல் […]

ஈராக்கில் இருந்து தங்களது கடைசிப் படைப்பிரிவையும் செவ்வாய்க்கிழமை (29) இத்தாலி முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி

ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேறியது இத்தாலி படை

  • September 29, 2026
  • 0 Comments

ஈராக்கில் இருந்து தங்களது கடைசிப் படைப்பிரிவையும் செவ்வாய்க்கிழமை (29) இத்தாலி முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் இத்தாலியின் 12 ஆண்டுகால இராணுவப் பணி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இராணுவத் தளத்தின் மீது இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதத்திற்குள் இத்தாலி தனது பெரும்பாலான பாதுகாப்புப் படையினரை ஈராக்கிலிருந்து திரும்பப் பெற்றிருந்தது. ஐஎஸ் (Islamic State) பயங்கரவாத அமைப்பிற்கு […]

உடல்தகுதி பிரச்சினைகளுக்குப் பிறகு, சீன ஓபன் தொடரில் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் களம் காணும் நோவாக் ஜோகோவிச், தனது உடல்நிலை தற்போது சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

சீன ஓபன் தொடரில் களமிறங்கும் Novak Djokovic

  • September 29, 2026
  • 0 Comments

உடல்தகுதி பிரச்சினைகளுக்குப் பிறகு, சீன ஓபன் தொடரில் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் களம் காணும் நோவாக் ஜோகோவிச், தனது உடல்நிலை தற்போது சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீன ஓபன் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், “ஆம், இதுவரை நிலைமை நன்றாகவே உள்ளது” என்று கூறினார். கடந்த ஆகஸ்ட் ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரின் முதல் சுற்றில் மரியானோ நவோனிடம் (Mariano Navone) எதிர்பாராத தோல்வியைச் […]

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த FIFA தலைவர் Gianni Infantino, உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பின் உறுப்பினர் சங்கங்களுக்கு பல மில்லியன் டாலர்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

உறுப்பு நாடுகளை வளைத்துபோட FIFA தலைவர் புது வியூகம்

  • September 29, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த FIFA தலைவர் Gianni Infantino, உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பின் உறுப்பினர் சங்கங்களுக்கு பல மில்லியன் டாலர்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். FIFA தலைவராக Gianni Infantino 10 ஆண்டுகளாக பதவி வகிக்கின்றார். அவரின் தலைமைப் பதவி குறித்து தற்போது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், இப்பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிட தயாராகி வருகின்றார். இந்நிலையிலேயே ஆதரவு திரட்டும் நோக்கில் அவர் இந்த நகர்வை முன்னெடுத்து வருகின்றார். அமெரிக்க ஊடகங்கள் திங்கள்கிழமை […]

வடக்கு காசா முனையிலுள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படையின் தலைவரான 'இஸ் அல்-டின் அல்-பைக்' (Izz al-Din Al-Beik) , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

ஹமாஸ் ஆயுதப்படை தளபதியையும் கொன்றுவிட்டோம் – இஸ்ரேல் அறிவிப்பு

  • September 29, 2026
  • 0 Comments

வடக்கு காசா முனையிலுள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படையின் தலைவரான ‘இஸ் அல்-டின் அல்-பைக்’ (Izz al-Din Al-Beik) , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களைத் திட்டமிட்டது மற்றும் போராளிகளைப் படையில் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அல்-பைக்கை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். அல்-பைக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி ஹமாஸ் […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்காக அனைத்தையும் செய்வோம்: அரசு உறுதி

  • September 29, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரி சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இதற்காக சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் […]

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

  • September 29, 2026
  • 0 Comments

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்த அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஞானசார தேரர் மீது விதிக்கப்பட்ட […]

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் RAF Fairford விமானத் தள சம்பவத்தின் பின்னணியில் "வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் கை ஓங்கியுள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

RAF Fairford சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி: அமெரிக்கா தகவல்

  • September 29, 2026
  • 0 Comments

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் RAF Fairford விமானத் தள சம்பவத்தின் பின்னணியில் “வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் கை ஓங்கியுள்ளது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு பிரித்தானியாவில் RAF Fairford விமானத் தளத்தில் பிரித்தானியா காவல்துறை அவசர சூழலை அறிவித்ததுடன், பிரித்தானியா அரசாங்கம் தேசிய அவசரகாலக் கூட்டத்தையும் நடத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் […]

தியாக தீபம் திலீபனின் சிலைக்கு எதிரான ஓர் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சித்தரிப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திட்டமிட்ட செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை செய்தி

திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் தமிழரசுக் கட்சியா?

  • September 29, 2026
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் சிலைக்கு எதிரான ஓர் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சித்தரிப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திட்டமிட்ட செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இது தன் மீது மட்டுமல்ல, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் திட்டமிட்டுக் களங்கப்படுத்துகின்ற செயல் என்றும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “நானும் […]

“ஜனநாயகத்தை இல்லாதொழித்து இலங்கையை வடகொரியாபோல் ஆக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியை வடகொரியாவுடன் ஒப்பிடுகிறது சஜித் அணி

  • September 29, 2026
  • 0 Comments

“ஜனநாயகத்தை இல்லாதொழித்து இலங்கையை வடகொரியாபோல் ஆக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “நீதித்துறை விவகாரத்தில் கையடிப்பதற்காகவே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியாகவே இச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் […]