உக்ரைன், ஈரான் விவகாரத்தில் அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு
இந்தியா மற்றும் போலந்து இடையே பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் புதிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி , பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் உறவை ஆழப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், போலந்து நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அழைப்பு […]













