இலங்கை செய்தி

திலீபன் சிலை விவகாரம்: யாழ். மேயரிடம் CID விசாரணை

"தியாக தீபம் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டா நல்லூரில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள்?" என யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி வி.மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

“தியாக தீபம் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டா நல்லூரில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள்?” என யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி வி.மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் காலப்பகுதியில் நல்லூரில் அவரது சிலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில், யாழ். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மேயரிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் போது, திலீபனுக்குச் சிலை வைக்க வழங்கப்பட்ட அனுமதி, சிலை வடிவமைக்கப்பட்ட விதம், சிலை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் இதற்கான சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பிரசன்னமாகியிருந்த மாநகர சபை உறுப்பினர்களின் விவரங்கள் வரை பல கோணங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்டு வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டன.

யாழ். குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினரே மாநகர சபை அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை