அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது 25 ஆம் திகதி வாக்கெடுப்பு

  • September 23, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என்பதால் பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், மூன்றில் இரண்டு சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது. உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 22வது திருத்தச் சட்டமூலம் குறித்து 24 மற்றும் 25ஆம் […]

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள Wei Huaziang , பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று ( 22) பாதுகாப்பு அமைச்சில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, சீனா ஆராய்வு

  • September 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள Wei Huaziang , பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று ( 22) பாதுகாப்பு அமைச்சில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில், பாதுகாப்புச் செயலாளரும் சீன தூதுவரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் […]

2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான பெரும் சதித்திட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர் ஷர்ஜில் இமாமுக்கு (Sharjeel Imam) 7 நாட்கள் இடைக்கால பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி

டெல்லி கலவர சம்பவம் குறித்து கைதான இமாமுக்கு இடைக்கால பிணை

  • September 22, 2026
  • 0 Comments

2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான பெரும் சதித்திட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர் ஷர்ஜில் இமாமுக்கு (Sharjeel Imam) 7 நாட்கள் இடைக்கால பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது. தனது மைத்துனரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக இடைக்கால பிணை கோரி ஷர்ஜில் இமாம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி சமீர் பஜ்பாய், அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 […]

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. செய்தி பொழுதுபோக்கு

சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கு வழங்கி வைப்பு

  • September 22, 2026
  • 0 Comments

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது. விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதாளர்களை பாராட்டி, அதற்கான விருதுகளை வழங்கினர். சிறப்பு அங்கீகாரம் பிரிவில், சோலா தோரா அவுர் சூரி என்ற ஹிந்தி […]

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இந்த வாரம் உரையாற்றவுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி ஐ.நாவில் உரையாற்றவுள்ள நெதன்யாகு

  • September 22, 2026
  • 0 Comments

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இந்த வாரம் உரையாற்றவுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். அதேவேளை, தம்மை விமர்சித்த நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, “நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரி” என நியூயோர்க் மேயர் சோஹ்ரன் மம்தானி சி.என்.என் (CNN) […]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 24 பேரில் 15 பேர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 9 பேர் போதியளவு சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு: 9 பேர் விடுவிப்பு

  • September 22, 2026
  • 0 Comments

  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 24 பேர் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ‘ட்ரயல்-அட்-பார்’ (Permanent Trial-at-Bar) அமர்வு வழங்கி வருகிறது. தாக்குதல்களுக்குச் சதி செய்தல் மற்றும் அதற்குத் துணைபுரிதல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன. குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 15 […]

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான மார்க் வூட் (Mark Wood), சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து அணியின் ‘வேகப் புயல்’

  • September 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான மார்க் வூட் (Mark Wood), சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான மார்க் வூட், தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியான காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். முழங்கை மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு 15 மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், கடந்த நவம்பரில் பெர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். எனினும், அப்போட்டியில் 11 […]

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில் நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. செய்தி விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி

  • September 22, 2026
  • 0 Comments

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில் நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து பதிலளித்த இலங்கை அணியை 69 ரன்களுக்குச் சுருட்டி, இந்தியா அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் […]

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கடுமையாகச் சாடியுள்ளார். உலகம் செய்தி

பாடசாலை மாணவர்கள் பயங்கரவாதிகளா? ஈரான் ஜனாதிபதி கடும் சீற்றம்

  • September 22, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கடுமையாகச் சாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இன்று தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி அவர்கள் விரும்பிய குற்றங்களைச் செய்து வருகிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே செயல்படுவதாக அவர்கள் உரிமை கோருகின்றனர்” […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தலையிட்டு அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

“மோடியும், அநுரவும் இணைந்து அனோஜனை காப்பாற்ற வேண்டும்”

  • September 22, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தலையிட்டு அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் தண்டனையை எதிர்கொண்டுவரும் சிவராஜா அனோஜனுக்கு விடுதலையையும் மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபரிமலை யாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தின் […]