நேபாள பிரதமரின் முதல் இந்திய விஜயம்: முக்கிய ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து பேச்சு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் பலேந்திர ஷாவும் (Balendra Shah) டெல்லியில் இன்று (23) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு, மின்சக்தி, போக்குவரத்து, ரயில் மற்றும் வீதி இணைப்புகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
நேபாள பிரதமர் பலேந்திர ஷாவின் இந்திய விஜயம் நவம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறுகின்றது. பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதுடன், மின்சக்தி தொடர்பான திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




