பேரழிவுகள் ஏற்பட்டபோதும் உடன்பாட்டிற்கு வராத பேச்சுவார்த்தையாளர்கள் – தோல்வியில் முடிந்த COP31
துருக்கியில் இடம்பெற்ற காலநிலை தொடர்பான COP31 பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தையாளர்கள் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
உயர்ந்து வரும் கடல் மட்டம் மற்றும் அதிகரித்து வரும் கார்பன் வெளியேற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்ற நிலையில், எவ்வித இணக்கப்பாடும் இன்றி இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது ஏமாற்றமளித்துள்ளது.
இது தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ள பெருவின் வெளியுறவு அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் இயக்குநர் ஆண்ட்ரெஸ் மார்ட்டின் காரிடோ சான்செஸ் Andres Martin Garrido Sanchez , “இந்த செயல்முறையின் நம்பகத்தன்மை” கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார்.
அத்துடன் “இந்த அமைப்புக்கு ஆழமான சீர்திருத்தங்கள் தேவை,” என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக விளங்கும் ஐ.நா. மாநாட்டின் பிரதிநிதியும், ஐ.நா. காலநிலைத் தலைவருமான சைமன் ஸ்டீல் Simon Stiell, ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான அமைப்பு இன்னும் செயல்பட முடியும், ஆனால் அதில் பணிகள் தேவை என்று கூறினார்.
உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழ்ப்பாளராகவும், அதே சமயம் குறைந்த கார்பன் தொழில்நுட்பத்தை வழங்கும் முக்கிய நாடாக விளங்கும் சீனா இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டது. இருப்பினும் சாதாகமான எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.
இந்நிலை ஏமாற்றம் அளிப்பதாக கரீபியன் நாடுகளின் CARICOM குழுவிற்குத் தலைமை தாங்கிய ஜேம்ஸ் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.




