இலங்கை செய்தி

முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலி

தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாளாகிய இன்று சனிக்கிழமை காலை, முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாளாகிய இன்று சனிக்கிழமை காலை, முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள மாவீரர் சங்கரின் வீட்டின் முன்பாகச் சுடரேற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி. கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் மகேஸ்வரி அம்மா மாவீரர் நினைவுச் சுடரை ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, வல்வெட்டித்துறை பதில் நகரபிதா நா. பத்மநாதன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் மாவீரர் வாரத்தின் முதலாவது நாளில் முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை