போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈராண்டுக்குள் 13,000 வீடுகள் – ஜனாதிபதி உறுதி
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ற்பாட்டில் மாத்தறை, வெலிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்: “வடக்கில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், வீடுகள் இன்றி இன்னமும் 13,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. போரினால் அவர்களின் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. வீடு அழிக்கப்பட்ட […]













