உலகம் செய்தி

புடினை சந்திக்கிறார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 27, 2026
  • 0 Comments

  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைVladimir Putin , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பு பெரும்பாலும் இன்று நடைபெறும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து, பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். தெஹ்ரான் மற்றும் மாஸ்கோ இடையே நிலவும் நெருக்கமான உறவை வலுப்படுத்தவும், முக்கிய […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி சிறுமி கடத்தல்!

  • April 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்கள் அதிகம் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் Alice Springs பகுதியில் பூர்வக்குடி முகாமில் இருந்து ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று Northern Territory காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். நேற்றிரவு முதல் காணாமல் போன அந்தச் சிறுமியைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஷரோன் கிரானைட்ஸ் என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஜெபர்சன் லூயிஸ் என்பவரைத் தேடி வரும் […]

அரசியல் இலங்கை செய்தி

21 மே தின பேரணிகளை நடத்துகிறது NPP!

  • April 27, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இம்முறை மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளது. பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். எரிசக்தி தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களைக்கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாவட்ட ரீதியில் 21 மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன. தேசிய மக்கள் சக்தி வழமைபோல் நடத்தும் பிரமாண்டமான பிரதான மேதின பேரணி இம்முறை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

செய்தி விளையாட்டு

டெல்லி, பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • April 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (27) நடைபெறும் 39 ஆவது லீக் ஆட்டத்தில் Delhi Capitals மற்றும் Royal Challengers Bengaluru ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி IPL 2026 தொடரில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அத்துடன், 5 போட்டிகளில் விளையாடியுள்ள Royal Challengers Bengaluru அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் அவ்வணி 7 ஆவது இடத்தில் உள்ளது.

உலகம் செய்தி

சிரிய முகாமிலுள்ள ஆஸ்திரேலிய பெண்களுக்கு அடைக்கலம் கிடைப்பதில் சிக்கல்!

  • April 27, 2026
  • 0 Comments

சிரியாவின் அல்-ரோஜ் முகாமில் தங்கியிருந்த நான்கு ஆஸ்திரேலியப் பெண்களும் ஒன்பது குழந்தைகளும் தற்போது அங்கிருந்து வெளியேறித் தாயகம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை சிரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்குப் பயணக் கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ள போதிலும், அவர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான நேரடி உதவிகளைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாவிடின் ‘தாயகம்’ பறிபோகும்!

  • April 27, 2026
  • 0 Comments

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்துவரும் ஒற்றுமை முயற்சிக்கு மத்தியில், தமிழ்த் தேசியப் பேரவை பிறிதொரு மாற்றுக் குழுவை முன்மொழிந்துள்ளமையானது தமிழ்க் கட்சிகளின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அண்மைக் காலமாகப் பல சந்திப்புகளைக் கொழும்பில் […]

செய்தி விளையாட்டு

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

  • April 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இறுதி பந்துவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர்வரை சென்றது. லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு […]

உலகம் செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பிலிருந்து முறையான அழைப்பு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் மோதல் மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடைகளால் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேரடிப் பேச்சுவார்த்தையில் […]

உலகம் செய்தி

ஈரான் போருக்கும், துப்பாக்கிசூட்டு சம்பவத்துக்கும் தொடர்பா?

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், தற்போதைய தகவல்களின்படி இது போர்ச் சூழலோடு இணைக்கப்படவில்லை என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் ஈரான் விவகாரத்தில் தனது வெற்றியை நோக்கி தொடர்ந்து செயல்படப்போவதாகவும் ட்ரம்ப் உறுதிபட […]

உலகம் செய்தி

சந்தேக நபரின் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. “உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.